நியாயப்பிரமாணம் மோசேயினால் வந்தது என்று அறிவோம்.
நிறைவேறும் வரையில் நியாயப்பிரமாணத்தின் ஒரு வார்த்தையும் அதின் உறுப்பாகிலும் அழிந்து போகாது என்று இயேசு சொல்லியிருக்கிறார். அவர் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி சிலுவையில் முடிந்தது என்று கூறி நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியிருக்கிறார். ரோமர் 10:4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
பவுல் 1 தீமோ 1:9-11 ல் கூறுகிறார்
9. எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
10. வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
11. நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
கலாத்தியர் 3ல் பவுல் கூறுகிறார்
10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
12. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
இப்படிப்பட்ட நியாயப்பிரமாணம் எப்படி இருக்கிறது என்றும் பவுல் கூறுகிறார்
கலாத்தியர் 3:24 இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
ஆக விசுவாசத்திலே நாம் நீதிமானாக்கப் படுவதற்கு ஒரு உபாத்தியாய் மட்டுமே நியாயப்பிரமாணம் இருக்கிறது.
இப்போது விசுவாசப்பிரமாணம் பற்றி காண்போம்.
கலாத்தியர் 3
13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு கர்த்தராகிய இயேசு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்... அல்லேலூயா.
ஆவியினால் வழிநடத்தப்பட்டால் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்டவர்களல்ல என்று பவுல் கலாத்தியர் 5ல் கூறுகிறார்.
17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கிறிஸ்துவோடே சிலுவையில் அறையப்பட்டு, ஞானஸ்நானத்தில் மூழ்கி அடக்கம் செய்யப்பட்டு, கிறிஸ்துவோடே உயிர்த்தெழுந்தவர்களாய், தேவனால் அருளப்பட்ட குமாரனின் ஆவியை நம்முள் கொண்ட தேவாலயமாக இருக்கும் நாம், ஆவியினால் வழிநடத்தப் பட்டு விசுவாசப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.
ஆவியின் கனியையோ, நம்மில் உள்ள ஆவியானவர் வழிநடத்த தானாய் கொடுப்போமல்லவா? மெய்யான திராட்சைசெடியான இயேசுவில் இணைந்து, பிதாவிற்காக மிகுந்த கனிகளை கொடுப்போமே.
இயேசுவை விசுவாசித்து அவரே நம் எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்வார் என்கிற இளைப்பாறுதலோடே அவருடைய இலகுவான நுகத்தை நம்மேல் ஏற்று நடப்பதே விசுவாசப் பிரமாணம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

No comments:
Post a Comment