கலகம் - பாவம், தவறு செய்ததற்கான ஏற்பு - நியாயப்பிரமாணம்- விசுவாசப் பிரமாணம்

ஆராய்ச்சியாளர்கள் மனிதக்குலத்தை தொன்மைக் காலம் முதலே தெரியாத சக்தியை வணங்கி வந்திருக்கின்றனர் என்று கூறுகின்றனர்..

உளவியலாளர்கள் மனிதர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு உள்ளார்ந்த தேவை என்று சொல்கிறார்கள். எனினும் இந்த உள்ளார்ந்த தேவைக்கு எதிராக கிளர்ச்சியில் போகும் கலக குணம் உள்ளது மற்றும் காரணமாக கெட்ட செயல்களை செய்ய, தவறான செயல்களின் விளைவாக, பயத்தினால் பெரிய சக்தியை வணங்கினர் என்றும் கூறுவர்..

இந்த வார தொடரில் கலகம், அதன் விளைவு மற்றும் விசுவாசிகள் எப்படி பாவப் பிரமாணத்தை விட்டு விசுவாசப் பிரமாணத்துள் வருவது என்று காண்போம்.


கலகம் மற்றும் அதன் விளைவாக - நியாயப்பிரமாணம்

ஆதாம் ஏவாள் கதை நன்கு அறியப்பட்ட கதையாகும். தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டனர்,. வேதாகமத்தில் பாவம் அவர்கள் மூலம் உலகில் வந்தது என்று காண்கிறோம்.. ஆக கீழ்ப்படியாமை பாவம் என்றும் காண்கிறோம்.

சரி பைபிளில் பல உள்ளன மற்றும் சில உதாரணங்களைப் பார்ப்போம்

ஆபேல் மற்றும் காயீன்

காயீன் ஆபேலின் காணிக்கையை ஏற்க கர்த்தருடைய முடிவை எதிர்த்து கலகம் செய்தது மற்றுமின்றி அவன் ஆபேலைக் கொன்று விடுகிறான்


மோசே ஆரோன் தலைமையின் கீழ் இஸ்ரவேல் மக்கள்

யாத்திராகமம் காலங்களில் இஸ்ரேலியர்கள் தேவனுக்கு எதிராக கலகம். செய்தனர். அவர்கள் தங்கத்தினால் ஒரு கன்றை செய்து வழிபட்டனர். இவ்வகைக் கலகங்களால் இவர்களுக்கு கானான் சென்றடைய 40 ஆண்டுகள் ஆனது இந்த கானான் கால் மூலம் சில நாட்கள் பிரயாண தூரம் என்றும் காண்கிறோம்

அந்த வனாந்த்ரத்தில் அவர்கள் தேவனை சினமூட்டும் படி, "நாங்கள் எகிப்தில் அடிமைகளாக சிறப்பாக இருந்தோம்" என்று முறுமுறுத்தனர். ஒவ்வொரு முறையும் மோசே மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்தான் என்று காண்கிறோம்..இம்மக்கள் கர்த்தரின் வல்லமையான கரம் செய்த அற்புதங்கள் மற்றும் செங்கடல் பிளந்து இருபக்கத்தில் தண்ணீர் சுவர்கள் நடுவே கடக்க செய்த தேவனை உணராதே செய்தனர்.

நியாயாதிபதிகள் காலத்தின் போது இஸ்ரவேல் மக்கள்

கர்த்தருக்கு விரோதமாய் இஸ்ரவேலர் பாவம் செய்ய, அவர்களுக்கு எதிராக புறஜாதியார் போர் புரிகின்றனர். அவர்கள் சூழப்பட்ட போது இஸ்ரேலியர் மனந்திரும்புகின்றனர். அவர்களை பாதுகாக்க இஸ்ரேலில் உள்ள நியாயாதிபதிகளை எழுப்புகிறார் கர்த்தர்.

 கலக குணம் மற்றும் கற்பனையை புரட்டுதல் 

இஸ்ரேலியர் அவர்களின் வசதிக்காக மோசே கொடுத்த நியாபப்பிரமாண சட்டத்தை புரட்டுகின்றனர்.

எதிரிகளை கொலை செய்ததை ஏற்கின்றனர். எனினும் ஸ்தேவானை தங்கள் பக்தி வைராக்கிராயத்தால் துன்பப்படுத்தி கொலை செய்தனர்.. இயேசுவை விசுவாசிப்பவர்களை கொலை செய்ய சம்மத்தித்தான் சவுல்,

எனவே தங்கள் சொந்த வசதிக்காக சட்டத்தை புரட்டுவதும் கலகமே.

கொலை செய்யக் கூடாது என்பது கற்பனை.

கர்த்தருக்கு பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன் ஆதலால் கொலை செய்தேன் என்றால் கற்பனையை மீறனவனாயிருப்பாய் சவுல் தன்னுடைய ஊழியத்தில் பவுலான் பின்பு புரிந்து.கொண்டதால் அன்பைக் குறித்து 2 கொரிந்தியரில் எழுதியதைக் காண்கிறோம்.

அடுத்த பதிவில் விசுவாசப் பிரமாணம் காண்போம்.

No comments:

Post a Comment