சகரியா மற்றும் மரியாள்

சகரியா மகா பரிசுத்த தூயறையில் காபிரியலைக் காண்கிறான். "உன் ஜெபங்கள் கர்த்தருடைய சந்நிதியில் வந்தடைந்தது  உனக்கு ஒரு மகன் பிறப்பான்" என்ற செய்தி சொல்ல, காபிரியேலை கண்டு.... நாங்கள் மூப்பரல்லவா என்று கூறுகிறான்.

இந்த சகரியா யார்? ஒரு மகா பரிசுத்த தூயறைக்குள் செல்ல முடிந்த ஆசாரியன் மோசேயின் ஐந்து புத்தகங்கள் நன்று படித்தவன். ஏசாயா மற்றும் தீர்க்க தரிசன புத்தகங்களை படித்தவன்.

கர்த்தர் எலியா, எலிசா போன்ற தீர்க்கதரிசிகள் மூலம் செய்த அற்புதங்களை அறிந்தவன்

ஆபிரகாம் சாராள், தங்கள் மூத்த வயதில் ஈசாக்கை பெற்றனர் என்பதை அறிந்தவன். அதே ஆபிரகாம் தலைமுறையில் வந்தவன்,

இத்தகையோன் எப்படி நினைத்தான் "நாங்கள் மூப்பர், எங்களுக்கு குழந்தையா?"

எவ்வளவு முறை நம் வாழ்வில் இதை செய்திருப்போம்? நாம் ஏதாவது பிரார்த்தனை செய்து கர்த்தர் நம் பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் போது, நாம் சொல்லியிருக்கிறோம் அல்லவா?....

என் வாழ்க்கையில் ஒர் உதாரணம் ...

நீண்ட நாட்கள் முன்பு, நான் ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஜெபம் ஏறெடுத்தேன். கர்த்தர் நான் அதை நிறைவேற்றுவேன், என்றார்.

கர்த்தர் சொன்ன அன்று நான்,

"என் வசிப்பிடத்தில் கார் பார்க்கிங் இல்லை. எனவே, காரைத் தந்தால் எங்கு நிறுத்துவேன்? என் தற்போதைய குடியிருப்பில் பார்க்கிங் செய்யும் படி இது ஒரு 2 வீலர், கொடுங்கள்" என்றேன். அடுத்த மாதமே ஒரு சிறு இருசக்கர வாகனம் வாங்கினேன்.

இந்த நிகழ்விற்குப் பிறகு, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்தே கார் வங்க முடிந்தது. இந்த காலயிடையில், எனக்கு திருமணமாகி, தேவனுடைய அருளால் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்ந்தோம்..

இந்த 14 ஆண்டுகளில், 3 ஆண்டுகள் நாங்கள் வசித்த இல்லங்களில் தனி கார் பார்க்கிங் இருந்தது. ஆயினும் இரண்டு சக்கர வாகனத்தை அதில் நிறுத்தியிருந்தோம்

என் கார் வாங்கும் ஜெபம் வழங்கப்பட்ட அதே நேரத்தில், அதை நிறுத்த கர்த்தர் இடம் கொடுப்பார் என்று விசுவாசித்திருந்தால் அன்றே கிடைத்திருக்கும்.... 14 ஆண்டுகள் காத்திருந்து கார் கிடைத்தது.

சகரியாவின் வாழ்வில், யோவான் ஸ்நானகன் கருவில் உருவாகி, அவன் பிறந்தப்பின் 8 நாள் வரை ஊமையாய் இருந்தான் என்று காண்கிறோம். அதாவது ஏறக்குறைய 10 மாதங்கள்....

மரியாளின் கீழ்ப்படிதல்

சகரியாவை சந்தித்த பிறகு காபிரியேல் மரியாளை சந்திக்கின்றான். மேசியாவின் பிறப்பைக் குறித்துஅறிவிக்கின்றான்,

இந்த மரியாள் யார்? யூதேயா புறநகரில் வசிக்கும் ஒரு சாதாரண குடிமகள், கலிலேயா என்று ஒரு பகுதியில். நசரேத் ஊரில் வாழ்ந்தவள். கலிலேயா என்பது ஒரு அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. ஆதலால் "கலிலேயாவில் இருந்து எந்த நன்மையும் வருமோ?" என்ற வழக்கு மொழி உண்டு.
மரியாள் என்ன சொல்கிறாள் என்பதை பார்க்கவும்

"இது எப்படியாகும்? புருஷனை அறியேனே?.! " மரியாள் கூறுகிறாள்...

இது சந்தேகமா? சகரியா வழக்கில் சந்தேகித்தான் என்றால், ஏன் நாம் கூற முடியாது மரியாளும் சந்தேகப்பட்டுவிட்டாள் தானே?

வித்தியாசத்தைப் பாருங்கள்.

மரியாளும் யோசேப்பும் திருமணம் புரிய நிச்சயிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சகரியா-எலிசபெத் திருமணம் செய்துகொண்டு நீண்ட நாள் இணைந்து வாழ்ந்து. ஒரு குழந்தைக்காக ஊக்கமாய் ஜெபம் செய்துள்ளனர்.

எனவே "மரியாளே ஒரு குமாரனைப் பெறுவாய்" என்றதும் ஒரு புருஷனின் உறவு வேண்டும் என்று, அவள் பூமிக்குரிய அறிவில் கூறுகிறாள்

காபிரியல் பதிலாக முடிக்கும் போது கூறுகிறான் "தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை",

ஆஹா! ... அவன் ஏன் சந்தேகித்தாய் என்று மரியாளை சாடவில்லை. அதற்கு பதிலாக அவர் மரியாளுக்கு உறுதியளிக்கிறான் "தேவன் சர்வவல்லவர்"

மரியாள் அந்த வார்த்தையை ஏற்று என்ன கூறுகிறாள் காணுங்கள், "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது"

கலிலேயா சேரியில் இருந்த, ஒரு எளிய, திருமணமாகாத கன்னி கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கிறாள். சகரியா, கற்றுத் தெளிந்த ஆசாரியன் விசுவாசமில்லாமல் சந்தேகிக்கிறான்.

ஆக நிலைமையை விளக்க கர்த்தரைக் கேட்கலாம். ஆனால் சந்தேகம் கூடாது. கடுகு விதையளவு நம்பிக்கை மலைகள் நகர்த்த முடியும் என்று இயேசு கூறியிருக்கிறார்.

நம்ப மறுப்பது மனிதப் போக்கு அந்த அவநம்பிக்கையை வீழ்த்தி கர்த்தர் சர்வ வல்லவர் என்று நம்புங்கள்.

கர்த்தர் தாமே உங்களை சத்தியத்தில் வழிநடத்துவாராக. 

No comments:

Post a Comment