பணம் வசூலித்து கர்த்தரின் நீதியை புரட்டுதல்

இயேசு தசமபாகம் குறித்து பரிசேயரை சாடும் போது, "தசமபாகம் கொடுத்து, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இரண்டும் இருக்க வேண்டும்" என்று கூறுகிறார்.

தசமபாகம் மற்றும் காணிக்கை வசூலித்தல் மிக நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய ஒன்று.

மெல்கிசேதேக்கிற்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான். அதைத் தொடர்ந்து யாக்கோபு தேவனுக்கு தசமபாகம் அளிப்பதாக பொருத்தனை செய்துக் கொண்டான்.  தசமபாகம் மோசே நியாயப்பிரமாண சட்டத்தில் வருகிறது.

இயேசு தன் பிரசங்கத்தில் "தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்யக் கூடாது" என்றார்.

நம் காலத்திலும் தேவாலயங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறார்களோ இல்லையோ, பணம் வசூலிக்க மறப்பதில்லை. எத்தனை சபைகள் தங்கள் வருமானம் மற்றும் செலவுகள் வெளிப்படையாகக் காண்பிக்கின்றனர்?

"எனக்கு பணம் வேண்டாம்." என்று கூறும் ஊழியக்காரரைக் காண்பது அரிது. /நான் அரிது என்று சொல்கிறேன்... கர்த்தர் எலியாவிடம் சொன்னது போல் பணம் என்றால் பின்னோக்கி வளையாத ஏராளமான ஊழியக்காரர்கள் உண்டு.

என் அனுபவம்

பல வருடங்களுக்கு முன்னர், நான் என் சம்பளம் பெற்று 10% எடுத்து உண்மையாக ஊழியம் செய்யும் ஒரு ஊழியக்காரரைச் சந்தித்து ஒரு உறையில் அந்த பணத்தைக் கொடுத்தேன். அவர், அதை எடுத்து கர்த்தரை ஸ்தோத்தரித்து முழு உறையையும் மீண்டும் என்னிடம் கொடுத்தார்.

நான் அவரிடம் கேட்டேன், நான் உங்களுக்கு கொடுத்த தசமபாகம் இது. அவர் கர்த்தர் என்னை திரும்பக் கொடுக்க கட்டளையிட்டார். தம்பி உங்களுக்கு அத்தியாவசிய தேவை உள்ளது அதனை போர்த்தி செய்யுங்கள் என்று, கூறினார்!

இப்படி பணத்தைத் திரும்பக் கொடுத்த  ஒரு ஊழியக்காரரைச் சந்தித்துள்ளீர்களா! சிலரை நான் சந்தித்துள்ளேன். கட்டுரையின் நீளம் கருதி ஒரே ஒரு உதாரணம் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

ஆமாம் அந்த குறிப்பிட்ட நிகழ்வில், எனக்கு புதிய ஆடைகள் வாங்க வேண்டியிருந்தது.

ஒரு விற்பனையாளன் (Sales Engineer) வேலையில் இருந்ததால் நன்கு உடையுடுத்தி இருக்க வேண்டிய கட்டாயம்.

என் தேவையைக் குறித்து நான் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை... வாங்கும் சம்பளத்தில் கைக்கும் வாய்க்கும் எட்டவே முடியாத நிலை தான் என் குடும்பத்தில். ஆதலால் துணி வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். .இந்த தேவையை கர்த்தர் பூர்த்தி செய்ய எனக்கு தசமபாகத்தை திரும்பச் செய்தார்.

மற்றொரு சாட்சி 

நேற்று நான் ஒரு கட்டுரை படித்து கொண்டிருந்தேன்.. அமெரிக்காவின் தேவாலயங்களில் ஒன்றில் தங்கள் ஞாயிறு சேவையில் போது காணிக்கை மற்றும் தசமபாகம் சேகரிக்கும் முறையை நிறுத்திவிட்டு அவர்கள் அதற்கு பதிலாக தேவையானோர் மற்றும் நலமற்றோர்க்கு மூப்பர் ஜெபம் ஏறெடுக்க அந்த நேரத்தை செலவிட்டனர்.

காணிக்கை சேகரிப்பதற்கு பதிலாக ஒரு காணிக்கைப் பெட்டியை தேவாலய வாயிலில் வைத்தனர்.

காணிக்கை தட்டு வரும் என்று காத்துக் கொண்டிருந்த சபையோர் வராததால், காணிக்கையை திரும்ப எடுத்துச் சென்றனர். ஆனால் இரண்டு மூன்று வாரங்களுக்கு காணிக்கைத் தட்டு வராததால் தங்கள் காணிக்கையை பெட்டியில் போடத் தொடங்கினர். அந்த போதகரின் சாட்சி, அந்த மாதத்திலிருந்து காணிக்கைப் பெட்டியில் இருந்து வந்த பணம், திருச்சேவையில் சேகரிக்கும் அளவை விட அதிகமாக வந்தது! (மேலும் படிக்க அவர்களது வலைதளம் செல்க http://bit.ly/2dEX7VD)

நம் உள்ளூர் தேவாலயங்கள் ஏன் இதை பின்பற்றுவதில்லை? நம் தேவாலயங்களில் பெரும்பாலானவைகளில் காணிக்கைப் பெட்டி உள்ளது. ஆக சேகரிக்காமல் இருப்ப்து தான் அவர்கள் செய்ய வேண்டியது..

இது சர்ச்சைக்குரியது தான். உலகப் பொருளுக்கு ஊழியம் செய்யாது தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமல்லவா?

தசமபாகம் மற்றும் காணிக்கையை நியாயப்படுத்த ஊழியக்காரர்கள் பல வேத வசனங்களை மேற்கோள் காட்டக்கூடும். கர்த்தருக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் மற்றும் நம்மை அவருக்கு முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டும். அப்படியென்றால் நாம் தேவனுக்கு உகந்த புனித வாழ்க்கை வாழ வேண்டும். அதையே அவர் விரும்புகிறார்.

அவர் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியவர். அவர் உங்களிடம் பொருள் எதுவும் எதிர்ப்பார்ப்பாரோ?

மக்கள், ஊழியக்காரர்கள், போதகர்கள், வேதாகமக் குறிப்புகளில் தசமபாகம் மற்றும் காணிக்கை குறித்து எழுதப் பட்டுள்ளதை சுட்டிக் காண்பிப்போரே, மோசே எழுதிய வேதாகமத்தில் உள்ள 5 புத்தகங்களை படியுங்கள். தசமபாகத்தைக் குறித்து உபாகமத்தில், வரும் வசனங்களைக் காணுங்கள்.

உபாகமம் 26:12-13. தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்;

உபாகமம் 12:11-12 மற்றும் உபாகமம் 14:23-29 படித்தால் "தசமபாகத்தை நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் சேர்த்து புசிப்பாயாக, உன் வாசலில் உள்ள லேவியனும் புசிக்கக் கொடு" என்று எழுதியிருக்கிறதைக் காண்க.

தசமபாகம் காணிக்கை குறித்து நியாயப்பிரமாண சட்டம் கூறியுள்ளவை தன்னை இந்த நாளில் உள்ள சபைகள் போதிப்பதில்லை.

கர்த்தர் காணிக்கைப் பெட்டியில் 2 காசு போட்ட விதவையைக் கண்டு சொல்கிறார்... இவள் தனக்குண்டானவை யாவும் போட்டுவிட்டாள்.... என்னே ஒரு நம்பிக்கை. கர்த்தர் தன் அடுத்த வேளை உணவிற்கு வழி செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை!

மேலும் கலாத்தியர் 5:18 இல் நியாயப்பிரமாணம் குறித்து போதிக்கும் போது பவுல் கூறுகிறார் "ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.."

நமக்கு உள்ள ஒரே நீதி, ஆவியானவர் சொல்லும்படி கொடுப்பது, அது 10% ஆக இருக்கலாம் அல்லது 100% ஆக, இயேசு பணக்கார வேதபாரகனுக்கு சொன்னது போலிருக்கலாம், அவர் கொடு என்று கூறி நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அது கீழ்படியாமை.

போதகர்களே அறிந்துக்கொள்ளுங்கள் நம் கர்த்தர் யெகோவா யீரே. தேவன் தாமெ உங்களின் தேவைகளைச் சந்திப்பார். சந்தேகம் வேண்டாம்.

இப்படியிருக்க, உங்கள் உடைமைகள், சொத்துக்கள், பணம், அனைத்தும் கர்த்தருடையவை என்று அறிவியுங்கள். இப்போது நீங்கள் பரிசுத்த ஆவி வழிநடத்துதலின் படியே செலவிடுங்கள். சிலர் உங்களை கலகக்காரர் எனலாம். சொல்லட்டும். இயேசுவையே பைத்தியம் பிடித்தவன் என்று சொன்ன உலகமிது.

ஆவியானவரின் சொல்லுக்குக் கீழ்படிந்து வாழ்வதே, கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை என்று புரிந்து கொள்ளுங்கள். கர்த்தருக்குப் பரிசுத்த வாழ்க்கை வாழுங்கள்.  அவர் பரிசுத்தராயிருப்பது போல், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்..

தேவனுடைய ஆவி வழிநடத்த உங்கள் செல்வங்களை செலவிடுவதே தேவனுக்கு உகந்தது. தேவன் தாமே உங்களை வழிநடத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment