கிழக்கு தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரியார் யாவர்?

கிழக்கு தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரியார் யாவர்? அவர்களின் தேசம் யாது? எப்போது அவர்கள்

இயேசுவை கண்டனர்?

மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் கிழக்கு தேசத்திலிருந்து சாஸ்திரியார் வந்து இயேசுவைக் கண்டு

வணங்கினர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் யார்?

எருசலேமின் கிழக்கே உள்ள நாடுகள் யாவை?

அம்மோன் (இக்கால யோர்தான் நாடு)
வட அரேபிய பாலைவனம்
இராக், இரான் (பண்டைய மெசபொடேமியா நாடு)
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா (இந்தோ - பார்த்தீய அரசென்று அழைக்கப்பட்டவை)
சீனா மற்றும் மற்ற கிழக்காசிய நாடுகள்

இப்போது இந்த தேசங்களில் எவையெல்லாம் வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று

காண்போம்.

அம்மோன் தேசம் ஆபிரகாமின் வழி வந்தோர். அவர்கள் ஒரே தேவனாகிய கர்த்தரை விட்டு வழி பிழன்று

போனவர்கள். அவர்களில் வான சாஸ்திரம் அறிந்தவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்திருந்தாலும்

அண்டை தேச ராஜாவாகப் பிறந்தவரை அவர்கள் வாழ்த்துதல் கூற வரவேண்டும் என்ற நிச்சயம் இல்லை.

வட அரேபிய பாலைவனத்தில் வசித்தவர்கள் இஸ்மவேலர்கள். அவர்களும் அம்மோன் புத்திரர் போலவே

வந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

மெசபதோமியா நாட்டில் வான சாஸ்திரம் கிமு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தது. ஆயினும்

அவர்கள் ரோமர்களின் ஆட்சியில் இருந்த இஸ்ரவேலுக்கு வந்து வாழ்த்துதல் சொல்வது மிக தூரமான

காரியம்.

சீனாவோ வான சாஸ்திரம் தங்களின் கட்டுக்கதைக்களுக்காக பயின்றனர். வாழ்வியல் முறைக்கு

பயிலவில்லை.

ஆனால் இந்தியர்களோ வான சாஸ்திரத்தில் மிகத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பது வரலாறு. ஜோதிட

சாஸ்திரத்திலும் பிறப்பு இறப்பை நட்சத்திரங்களை கண்டு தெளிவதும் இந்தியர்கள் முன்னோடிகளாக

இருந்தனர்.


கிறிஸ்துவ பாரம்பரியத்தில் சாஸ்திரியார்கள் மூவர் எனவும் ஒருவர் மெசபத்தோமியாவில் இருந்தும்,

ஒருவர் அரபியாவில் இருந்தும் மற்றவர் இந்தியாவில் இருந்தும் வந்தனர் என்று குறிக்கின்றனர் பாரம்பரிய

கிறிஸ்துவ பாதிரிமார்.

மூன்று காணிக்கைகளால் மூவர் என்றனரோ என்பது விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

மத்தேயு தன் சுவிசேஷத்தில் எல்லா சாஸ்திரிகளும் ஒரே நேரத்தில் வந்ததாக கூறுகிறார். ஆக வெவ்வேறு

நாடுகளில் இருந்து வருவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. அல்லது ஏதோ ஒரு காரணியில் இவர்கள் ஒன்று

சேர்ந்து இருந்திருக்கும் போது, அந்நேரத்தில் நட்சத்திரம் கண்டு பின்னர் வந்திருக்க வேண்டும். ஆனால்

வந்தவர்கள் வணிகர்கள் அல்ல, பொன்னும், சுகந்த வருக்கமும், வெள்ளைப் போளமும் கொண்டு வந்தனர்

என்று குறிக்கிறார் மத்தேயு.

ஆகவே யாவரும் (இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேலானவர்களாகவும் இருக்கலாம்) அவரவர் தேசத்திலிருந்தே காணிக்கைகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.

காணிக்கைகளை காண்போமானால்,
பொன் - இந்தியாவில் பொன் கிமு பல நூற்றாண்டுகளாக வர்த்தகத்தில் இருந்து வந்திருக்கிறது.

சுகந்த வர்க்கம் - தமிழில் சாம்பிராணி என்று கூறுகிறோமே இந்தியாவில்  கிமு பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த ஒரு வருக்கம்.

வெள்ளைப் போளம் - இந்தியாவில் ஆயூர்வேத முறைமையும் கிமு பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அதனால் வெள்ளைப் போளம் சாஸ்திரியார் எடுத்து வந்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை.

கிறிஸ்தவ பாரம்பரியம் மூன்று சாஸ்திரியார்களும் அந்தந்த தேசத்தின் ராஜாக்கள் என்று கூறுகின்றனர். ஆனால் ராஜாக்கள் வான சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களாக இருந்ததில்லை. இராஜாக்கள் மற்ற ராஜாவை பணீய வேண்டியதும் இல்லை. ஆக வான சாஸ்திரம் அறிந்த சாஸ்திரிகள் ஜோதிடக் கலைஞர்களாகவே இருந்திருக்க வேண்டும். அவர்கள் இராஜாக்கள் என்றால் ஏரோது அவர்களை கவுரவித்திருக்க வேண்டும்.

இப்பொழுது அவர்கள் எங்கு சந்தித்தனர் என்று காணலாம்.


1. மரியாளும் யோசேப்பும் பெத்லகேம் சென்றனர்
2. இயேசு பெத்லகேமில் பிறந்தார். பிறந்தவரை விடுதியில் அறையில்லாத காரணத்தால் விடுதியின் முன்னனையில் கிடத்தினர் என்பதை மத்தேயு கூறுகிறார்
3. ஆனால் சாஸ்திரியார்களோ வீட்டில் வந்து கண்டதாக குறிப்பிடுகிறார் மத்தேயு.
4. எட்டாம் நாளில் இயேசுவிற்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதாகவும் அவர் முதற்பேறானவர் ஆனதால் அவருக்காக பலி கொடுக்க எருசலேம் ஆலயத்தில் வந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார்.
5. மரியாளும் யோசெப்பும் குழந்தை இயேசுவுடன் பிறந்த சில நாட்களில் (ஆறாம் நாளோ அல்லது ஏழாம் நாளோ புறப்பட்டு) எருசலேம் வந்திருக்கலாம். பின்னர் அவர்கள் நாசரேத் சென்றிருக்கலாம். மரியாள் நாசரேத் ஊராள் என்பதையும் குறிப்பிடுகிறார் லூக்கா.
6. ஆக நாசரேத்திலோ அல்லது வேறு வழியில் ஏதாவது ஊரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது தான் சாஸ்திரியார் இயேசுவையும் அவர் பெற்றோரையும் கண்டிருக்க வேண்டும்.
7. ஏரோதோ பெத்லகேமில் தான் பிறந்திருப்பார், பெத்லகேமிலே தான் வசிப்ப்வர் என்று நினைத்து பிள்ளைகளை கொல்ல ஆணை பிறப்பித்திருக்க வேண்டும்.
8. ஆனாலும் நாசரேத் ஊருக்கு விசாரித்துச் செல்வது மிக எளிதான காரியம். எனவே சொப்பனத்தில் யோசேப்பு எச்சரிக்கப் பட்டு எகிப்திற்கு அவர்கள் ஓடிப் போயிருக்க வேண்டும். ஏரோது ஆணைக்கு முன்னேயே அவர்கள் புறப்பட்டு சென்றிக்க வாய்ப்பு அதிகம்.

இந்த நடபடிகளைக் கண்டால், இந்திய தேசத்திற்கு இயேசு பிறந்த நற்செய்தி அவர் பிறந்த உடனே தெரிந்திருக்கிறது. தோமா அதன் பின்னர் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு பின்னரே இந்தியா வருகிறார்.

No comments:

Post a Comment