கிறிஸ்தவர்களாகிய நாம் சில நேரம் நமது ஜெபங்களில் எல் ஷடாய் என்று துதிப்பதுண்டு. அதன் பொருள் என்னவென்று நமக்குத் தெரியுமா? அதற்கு 3க்கு மேல் பொருள் உள்ளன என்பதை அறிவோமோ.
சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்
வனாந்திரத்தின் தேவன்
மலைகளின் தேவன்
போஷிக்கும் தேவன்.
இம்மூன்றும் விவாதத்திற்கு உரியவையே.
இதைத் தவிர பண்டைய அரமேயாவில் ஷடாய் என்று ஒரு நகரம் இருந்ததாகவும் அந்த நகரத்தின் காவல் தேவதை என்றும் கூறுகின்றனர். பீலேயாம் இஸ்ரவேலுக்கு விரோதமாக குறிசொல்ல அழைப்பிக்கப் பட்ட போது அவனும் ஷடாய் என்ற பதத்தை உபயோகிக்கின்றான். ஆங்கிருந்த ஒரு அந்நிய தேவனை குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எபிரேயு என்பது நமக்கு தெரிந்த பழக்கப்பட்ட மொழியல்ல. பண்டைய எபிரேயு வழக்கத்திலும் இல்லை. ஆகவே பொருள் தெரிந்து நம் தேவனை நம் மொழியில் நாம் ஆராதிப்போம். எபிரேய மொழியை அந்நிய பாஷையில் ஆவியானவர் நமக்கு அருளினால் பேசுவதைத் தவிர அறியாத மொழிகளில் தேவனை ஆராதிப்பதை தவிர்ப்போம்.
நம் தேச மக்கள் அறியாமல் சமஸ்கிரத மொழி ஸ்லோகங்களை கூறுகின்றனர். நாமும் அறியாமல் ஆராதித்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இயேசு சொன்னதை நினைவு கூறுங்கள். பரிசேயரின் நீதியை விட நம்முடைய நீதி அதிகமாய் இருக்க வேண்டும்.
அல்லேலூயா. கர்த்தர் உங்களை மேலும் வழிநடத்துவாராக.
ஆபிரகாம் கிரி
No comments:
Post a Comment