(மாற்கு 2 : 17, லுக்கா 5:31)
நாம் நான்கு சுவிசேஷத்திலும் படிக்கிறோம், இயேசு கிறிஸ்து பலரை பிணி நீக்கி குணமாக்கினார்
1. விசுவாசத்தை கண்டு திமிர்வாதம் குணமாக்குதல் - மாற்கு 2 : 3
2. அவிசுவாசத்திலும் குணமாக்கினார் - மாற்கு 6 : 5
3. லாசரு - யோவான் 11 : 3 - 4
4. நூற்றிக்கதிபதியின் சேவகன் மத்தேயு 8 : 6
5. கேட்காத ஆளிற்கும் குணம் (பெதெஸ்தா) யோவான் 5 : 7, பலர் மத்தேயு 14 : 14. மத்தேயு 4 : 23
6. குணமளிக்கும் அதிகாரத்தை சீஷர்களுக்கு கொடுத்தார் மத்தேயு 10 :8, லூக்கா 10 : 9

அப் 5:15ல் பேதுரு சென்ற இடமெல்லாம், அவன் நிழல் பட்ட உடனே பிணியாளிகள் குணமானார்கள்.
பேதுரு ஒன்றும் மிகத் தூய்மையான சீஷன் அல்ல. அவனிடமும் குறைகள் இருந்ததாகவும் பவுலுக்கும் பேதுருவுக்கும், யூதர் முறைமையில் யூதருக்கு முன்பாக பொய்மையாக நடித்தமைக்காக வாக்குவாதம் வந்ததென்றும் காண்கிறோம். ஆதலால், நாமெல்லாரும் இயேசுவைப் போலே மாசற்ற தூயவராக இருந்தால் தான் அவரைப் போல குணமாக்கக் கூடும் என்ற எண்ணம் வேண்டாம்.
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் என்ன செய்கிறார்கள்
1. வாராவரம் தேவாலயம் செல்கிறார்கள், பலர் கடமைக்காக செல்கிறார்கள்.
2. போதகர் கூப்பிட்டால் சிலர் சுவிசேஷம் அறிவிக்க செல்கிறார்கள்
3. பாவம், பரிசுத்தம் என்று சொல்லிக் கொண்டே, செக்கு மாடுபோல் அதே செக்கில் உழன்று பாவம் செய்து அறிக்கையிட்டு விழுந்து விழுந்து
எழுந்திருக்கிறோம்

உண்மையாய் கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் செய்ய வேண்டியது
உடலளவில் இருக்கும் பிணிகளை குணமாக்கும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது
மாற்கு 16:18 - கடைசி பணிக்கை சீஷர்கள் ஆக்குவதற்கு மட்டுமல்ல, அடையாளங்களாக பிணியாளிகளை குணமாக்கவும் தான். பலர்
நவமான பாஷை பேசும் அடையாளத்தை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விடுகிறார்கள்.
நவமான பாஷை பேசும் அடையாளத்தை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விடுகிறார்கள்.
மத்தேயு 25:36, இயேசு அழகாக சொல்கிறார், பிணியுற்று இருந்தேன், என்னை வந்து பார்த்தீர்கள். இங்கே பிணியை குணமாக்குவதைக்
குறித்து அவர் சொல்லவில்லை. பார்க்கவாவது செல்லலாமே.
குறித்து அவர் சொல்லவில்லை. பார்க்கவாவது செல்லலாமே.
ஆனால் இயேசு பிணியாளிக்கு வைத்தியன் தேவை என்று மாற்கு 2 : 17 சொல்லும் போது அவர் சொல்வது நீதிமான்களை அல்ல,
பாவிகளையே இரட்சிக்க வந்தேன். ஆவிக்குரிய பிணிகளை சுகமாக்கும் அதிகாரமும் நமக்கு உண்டு
பாவிகளையே இரட்சிக்க வந்தேன். ஆவிக்குரிய பிணிகளை சுகமாக்கும் அதிகாரமும் நமக்கு உண்டு
மக்களை பிடித்துள்ள மிகப்பெரிய ஆவிக்குரிய பிணிகள்
1. பாவம்
2. பெருமை
3. பொறுமையின்மை
4. அகங்காரம்
5. மரியாதையின்மை
6. சுயலாபம்
7. சினம்
8. மன்னிப்பின்மை
9. தீயவையில் நாட்டம்
10 நாவடக்கம் இன்மை
2. பெருமை
3. பொறுமையின்மை
4. அகங்காரம்
5. மரியாதையின்மை
6. சுயலாபம்
7. சினம்
8. மன்னிப்பின்மை
9. தீயவையில் நாட்டம்
10 நாவடக்கம் இன்மை
இவைகளை தவிர பல பிணிகள் உண்டு. ஆனால், தேவ ஆவியானவர் இந்நாட்களில் மிகவும் வருத்தப்படுவது இவைகளே.
கிறிஸ்தவர்களாகிய நம்மில் தேவ ஆவியானவர் குடி கொண்டிருக்க, நாமும் இயேசுவைப் போல் பிணியாளிகளுக்கு மருத்துவராக இருக்க வேண்டும்.
இந்த பெரிய பிணிகளில் பல பிணிகள் கிறிஸ்தவர்களிடையே இன்னும் இருப்பதை உணர முடிகிறது. இதற்குக் காரணம் அன்பில்லாமையே.
தேவ அன்பு இருந்தால் 1 கொரிந்தியர் 13 : 4-7ல் வருவது போல் பல பிணிகள் கிறிஸ்தவர்களிடையே இருக்காது.
இந்நாளில், உங்களின் பிணிகளை நீக்கி, பிணியுற்றிருக்கும் மக்களுக்கு வைத்தியராக இருக்க நீங்கள் ஆயத்தமா?
வெறும் கேரல் என்ற பெயரிலோ, சுவிசேஷம் சொல்லச் சென்றோம் என்ற பெயரிலோ ஏற்கனவே கிறிஸ்துவை அறிந்தவர்களின் வீடுகளுக்குச் செல்வதும், கைப்பிரதிகளை கொடுப்பதும் எந்த விதத்தில் கிறிஸ்துவை பிரதிபலித்தோம் என்று எண்ணிப் பாருங்கள்?
இப்படியே வாழ்ந்துவிட்டீர்கள் என்றல், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தோம் என்ற மாயத்தோற்றம் மட்டுமே மிஞ்சும்.
இப்படியே வாழ்ந்துவிட்டீர்கள் என்றல், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தோம் என்ற மாயத்தோற்றம் மட்டுமே மிஞ்சும்.
யார் செல்வார், செல்லவில்லை என்றால் யார் சொல்வார்?
நற்செய்தியை கொண்டுவருவோரின் கால்கள் எத்தனை அழகு!
அவர்களை குணமாக்க நீங்கள் ஆயத்தமா?
No comments:
Post a Comment