முற்காலத்தில், துறவிகள் உலகைத் துறந்து தனியாக இருக்க சில மடங்கள் கட்டப்பட்டன. எதற்கென்றால், அவர்கள் பாவம் செய்தவர்களுடன் உறவாடாவிட்டால் பரிசுத்தத்தை அடைய முடியும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, இந்த கருத்து இன்றும் இருக்கிறது.
கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சில பாவங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலிருந்தோ அல்லது தீமை குறைவாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் சேருவதன் மூலமோ உலகின் தீமையிலிருந்து தப்பிப்பார்கள் என்று பெரும்பாலும் கருதுகிறார்கள். இதிலும் நன்மை உண்டு தான். பழைய ஏற்பாட்டில், தேசம் மற்ற தேவர்களைப் பின்பற்றாதபடி, தேவன் இஸ்ரவேலர்களை கானானியர்களிடமிருந்து பிரிந்திருக்கக் கட்டளையிட்டார்.
ஆனால் புனிதத்தை உருவாக்க ஒரு கிறிஸ்தவ சூழலை நம்பியோர் (அதன் மூலம் உலகின் தீய பழக்கங்களை விட முடியும் என நம்புவோர்) பெரும்பாலும் கிறிஸ்தவ சூழல்களால் ஆத்தும இரட்சிப்பு வருவதில்லை என்பதை உணர்வதே பல இடறல்களைக் கடந்தபின்னரே தான். கார் நிறுத்தும் கேரேஜில் இருசக்கர வாகனம் நிறுத்தினால் அது கார் ஆகிவிடாதே.
பரிசுத்தமாக ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னும் அடிப்படையாக ஒன்று நடக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ சூழல் தேவபக்தியை ஊக்குவிக்க உதவலாம், ஆனால் பரிசுத்தமாக்கிட உத்தரவாதம் தராது.
No comments:
Post a Comment