நம் கடந்தகால மகிமைகளால் என்ன பயன்?

ஒரு பெண்ணுக்கு அழகான பட்டு உடை வைத்திருந்தாள். அவள் அதை திருவிழாக்கள் மற்றும் திருமணங்களுக்கு மட்டும் அணிந்தாள். அப்படி ஒரு பண்டிகைக்கு அந்த ஆடையை அணிய விரும்பி தன் அலமாரியைத் தேடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவளால் அந்த ஆடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் மிகவும் சோகமாக இருந்தாள், அன்று அவள் அழுதாள், பண்டிகையை கொண்டாடவில்லை. அவள் முதலில் தன் வேலைக்காரி ஆடையைத் திருடிவிட்டாள் என்று நினைத்தாள். ஆடை வண்ணானிடமிருந்து திருப்பித் தரவில்லை என்று அவள் நினைத்தாள். எண்ணங்களின் பல்வேறாயின... பிறகு அவள் ஆடையை மறந்தேவிட்டாள். ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பெண்ணுக்கு வயதாகி கிழவியானாள். அவளால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. அவளுடைய குழந்தைகள் திருமணம் செய்துகொண்டு போயினர். அவளை தனியாக விட்டுவிட்டார்கள். அவளது கணவர் இறந்துவிட்டார். அவளுடைய பழைய வேலைக்காரி மட்டும் அவளுடன் இருந்தாள். ஒரு நாள் அவர்கள் அலமாரிக்கு அடியில் நிறைய எறும்புகள் வெளிவருவதைக் கண்டார்கள், அலமாரியின் அடிப்பகுதியை சுத்தம் செய்ய ஒரு தச்சரை அழைத்து வரும்படி அவள் வேலைக்காரியிடம் கேட்டாள். தச்சன் வந்தபோது பின்னால் இருந்து விழுந்த ஒரு பழைய வண்ணான் பாக்கெட்டைக் கண்டார். அவர் வெளியே வந்து பாக்கெட்டை எடுத்து வீட்டு பெண்மணியிடம் கொடுத்தார். அவள் அதைப்பிரித்தால் காணாமல் போன பட்டு உடை . ஆனால் அந்த ஆடை சிதைந்து கிழிந்திருந்தது. எறும்புகள், பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் அதை முழுமையாகக் கெடுத்துவிட்டது.

அந்தப் பெண் துணியைப் பார்த்து, தன் இளமைக் காலங்களை நினைவு கூர்ந்தாள். ஆனால் அவள் அதை தூக்கி எறிய வேண்டியதாயிற்று, ஏனெனில் அதனால் யாருக்கும் பயனில்லை.

மறந்துபோன இந்த பட்டு உடை போன்றது நமது கடந்தகால மகிமைகள். நாம் அவ்வப்போது புதுப்பித்து, கர்த்தரிடத்தில் வளராவிட்டால், நம்முடைய கடந்தகால மகிமைகள் சிதைந்து, நாம் தகுதியற்றவர்களாகி விடுவோம்.

எரேமியா 13:1-7 தியானித்தபோது எழுதிய கதை

ஆபிரகாம் கிரி - 7 டிசம்பர் 2019

No comments:

Post a Comment