சேனைகளின் கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
ஒலிவ மலை - இயேசுவைப்போல் வாழ்க்கை ஊழியங்களில் நாங்கள் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களை கீழ்க்கண்ட தேவ ஊழியம் செய்யத் தேடுகிறோம்.
மொத்த பணி இடங்கள்:
5 முழுநேர ஊழியர்கள் மற்றும் 4 பகுதிநேர ஊழியர்கள்.
ஊழியர் செய்ய வேண்டியவை
1. எமது முகநூல், ப்ளோகர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பதிவிடுதல்
2. புதிய சமூக ஊடகங்களில் எமது ஊழியங்களைக் கொண்டு சேர்த்தல்
3. தேவ வசனத்தை பரப்ப நூதனமான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்
4. வேத வாசிப்பிற்காக சிறு குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் உறுப்பினர்களை கடைசிகால அறுவடைக்கு ஆயத்தமாக்குதல்
தேவையான தாலந்துகள்
1. முழுநேர ஊழியர் இரட்சிக்கப்பட்டு - நீரினாலும், ஆவியினாலும் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவராக இருக்க வேண்டும். புதிய கிறிஸ்தவர்கள் பகுதி நேர ஊழியராகலாம். அவர்கள் முழுநேர ஊழியரின் கீழோ, மூப்பர்களின் கீழோ பணிபுரிவர். இப்பணியிடங்கள் மதசார்பற்றவையல்ல.
2. பரமபிதா இயேசுவை வழைநடத்தியது போல் எங்களை வழிநடத்துகிறார் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம் (யோவான் 5:19). ஆதலால் ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் ஊழியருக்கு தேவையான தகுதி.
3. ஆங்கில புலமை விரும்பத்தக்க தகுதி. தமிழில் பேசத் தெரிந்திருத்தல் நலம்.
4. தமிழகத்தில் ஊழிய இடம் என்பதால் தமிழக மக்கள் விண்ணப்பித்தல் நலம். ஆனால் இருப்பிடம் தடையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர் மக்களை சமூக வலைதளம் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு வேண்டிய பலனை தந்தால் போதுமானது.
5. முழுநேர ஊழியர்களுக்கு மனித மேலாண்மை தாலந்து அவசியம்.
6. கர்த்தரின் மகிமைக்காக அச்சிடப்படும் புத்தகங்களுக்கு உதவி செய்தல் அவசியம்.
சம்பள விவரம்
இயேசுவின் சொற்படியே "வேலைக்காரன் தன் கூலிக்குப் பாத்திரன்" என்பதையும் "அவரால் அனுப்பப்பட்டு ஊழியம் செய்பவர்களுக்கு எந்த குறையும் ஏற்படாது" என்பதையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்.
நாங்கள் ஒரு மதத் தொண்டு நிறுவனம் ஆதலால் சுவிசேஷம் பரவவும், வேத வாசிப்பிற்கும், வெளி ஊழியத்திற்கும் மட்டுமே அதிக செலவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். வேதாகமம் நமக்கு வழிகாட்டிய படியே செய்வோம்.
இயேசு ஒரு தச்சராக தன் குடும்பத்தை தாங்கினார் என வரலாறு கூறுகிறது. இயேசுவின் தாய் மரியாளும் அவரோடே கூடவே அவரது ஊழிய பயணங்களில் சென்றதை சுவிசேஷத்தில் படிக்க முடிகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார் "நான் உங்களுக்கு பாரமாக இல்லாதபடி என் உணவிற்காக நானே உழைத்தேன்." அவர் கூடாரத்தொழில் செய்ததாக வேதம் நமக்கு போதிக்கிறது.
எமக்கு கர்த்தர் அளித்துள்ள பணத்தில் இருந்து சம்பளம் அளிப்போம், ஆயினும் ஊழியர்கள் தங்கள் "கூடாரத்தொழில்" செய்வதை ஊக்குவிக்கிறோம்.
பகுதி நேர ஊழியர்கள் கண்டிப்பாக கூடாரத்தொழிலில் தங்களது செலவை பார்த்துக்கொள்ள வேண்டும்.
முழு நேர ஊழியர்களாக தமிழகத்தில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்திற்கான செலவும், சிறிய நன்கொடையும் அளிக்கப்படும்.
எதிர்ப்பார்ப்புகள்
நாம் கடைசிகாலத்தில் இருப்பதால் தேவ மந்தை தேவ வசனத்தை புசிக்க, உள்ளும் புறமும் சென்று மேய்ச்சலைக் கண்டடைய, அறுவடைக்குப் பாத்திரராக, அறுவடைக்கு மற்றவர்களை பாத்திரராக்க ஊக்குவிக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். இதனை ஊழியர்களாக பணியேற்பவர் தேவனுக்குக் கீழ்ப்படியும் பிள்ளையாக, பரிசுத்த ஆவி தரும் ஆணைகளைக் கேட்டு, முழு மனதுடன் பின்பற்ற விருப்பம், எது வரினும் பின்பற்றும் மன உறுதியும் இருக்க வேண்டும்.
பணியிடங்கள் நிரப்பப்பட எதிர்ப்பார்க்கும் கடைசி தேதி:
31 மார்ச் 2020
பொறுப்புத்துறப்பு
எங்கள் ஊழியம் ஒரு கிறிஸ்தவ ஊழியம் என்பதால் சில பணியிடங்கள் மதச்சார்பற்றவையல்ல. கிறிஸ்தவ நம்பிக்கைகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், அப்பதவிகளுக்கு மத பாகுபாடு காட்டவேண்டியுள்ளது. மதம் சம்பந்தப்படாத பணிகளுக்கு சம வாய்ப்பு வழங்குகிறோம்
கர்த்தரால் வழிநடத்தப்படுவோர் மட்டும் உங்களது விண்ணப்பங்களை Mountofolives-Christlikeliving@thepolyglotsindia.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புக.

No comments:
Post a Comment